ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: மும்பை-லக்னோ, டெல்லி-பெங்களூரு மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: மும்பை-லக்னோ, டெல்லி-பெங்களூரு மோதல்
x

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story