ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்

இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி 8-வது இடம் பிடித்தது.
ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்
Published on

கொல்கத்தா,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான (டிரேடிங்) பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தங்களது பயிற்சியாளர்கள் குழுவில் பல மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வரிசையில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரை நியமித்தது. அத்துடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து கே.எல்.ராகுலை வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த வரிசையில் கொல்கத்தா அணி தங்களது புதிய உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சனை நியமித்துள்ளது.

முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டன் ரகானே தலைமையில் விளையாடிய கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து வெளியேறியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com