ஐபிஎல்: பெங்களூரு அணியில் இணைந்த முக்கிய வீரர்கள்

போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர்.
பெங்களூரு,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர்.
நாடு திரும்பிய வீரர்கள் தற்போது அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு அணியில் முக்கிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர் .அதன்படி பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல் , டிம் டேவிட் , ரோமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






