ஐ.பி.எல்.: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்

image courtesy:PTI
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார்.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 640 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் (618 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் - 640 ரன்கள்
2. சச்சின் தெண்டுல்கர் - 618 ரன்கள்
3. சூர்யகுமார் யாதவ் - 605 ரன்கள்
4. சச்சின் தெண்டுல்கர் - 553 ரன்கள்
5. சிம்மன்ஸ் - 540 ரன்கள்






