ஐ.பி.எல்.: அறிமுகமான முதல் போட்டியிலேயே சாதனை பட்டியலில் இணைந்த சூர்யவன்ஷி


ஐ.பி.எல்.: அறிமுகமான முதல் போட்டியிலேயே சாதனை பட்டியலில் இணைந்த சூர்யவன்ஷி
x

லக்னோவுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வீரராக களமிறங்கினார்.

ஜெய்ப்பூர்,

ஐ..பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 74 ரன் எடுத்தார். லக்னோ தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி கெரியரை அற்புதமாக தொடங்கினார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சந்தித்த முதல் பந்தியிலேயே சிக்சர் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 10-வது வீரராக இணைந்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ராப் குயினி

2. கெவோன் கூப்பர்

3. ஆண்ட்ரே ரஸ்ஸல்

4. கார்லோஸ் பிராத்வைட்

5. அனிகேத் சவுத்ரி

6. ஜாவோன் சியர்ல்ஸ்

7. சித்தேஷ் லாட்

8. மகேஷ் தீக்ஷனா

9. சமீர் ரிஸ்வி

10. வைபவ் சூர்யவன்ஷி

1 More update

Next Story