ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு ஆட்டம் டிரா
x

Image Courtesy: @IndSuperLeague / @eastbengal_fc / @bengalurufc

தினத்தந்தி 2 March 2025 9:32 PM IST (Updated: 3 March 2025 2:38 AM IST)
t-max-icont-min-icon

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தன.

இதற்கு பலனாக ஆட்டம் முடியும் தருவாயில் பெங்களூரு அணி (90+1வது நிமிடம்) பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

1 More update

Next Story