ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது தெரியுமா..?

image courtesy:twitter/@ACCMedia1
இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது.
துபாய்,
19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற்றிருந்த 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் வங்காளதேசம்- பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.
Related Tags :
Next Story






