கபில் தேவ், பும்ரா அல்ல.. பந்துவீச்சில் இந்தியாவின் மேட்ச் வின்னர் அவர்தான் - ஹர்பஜன் தேர்வு


கபில் தேவ், பும்ரா அல்ல.. பந்துவீச்சில் இந்தியாவின் மேட்ச் வின்னர் அவர்தான் - ஹர்பஜன் தேர்வு
x

image courtesy:PTI

அஸ்வினின் யூடியூப் சேனனில் சிறப்பு விருந்தினராக ஹர்பஜன் கலந்து கொண்டார்.

மும்பை,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என 3 துறைகளிலும் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் வீரர்களிடம் குறிப்பிட்ட ஒரு துறையில் சிறந்து விளங்கிய வீரரை தேர்வு செய்ய கேள்விகளை எழுப்பும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் யூடியூப் சேனனில் சிறப்பு விருந்தினராக மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கலந்து கொண்டார்.

அதில் பந்துவீச்சில் இந்தியாவின் மேட்ச் வின்னர் யார்? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹர்பஜன், 'அனில் கும்ப்ளே'-வை தேர்வு செய்தார்.

இந்திய முன்னாள் ஜாம்பவன் வீரர் கபில் தேவ், தற்போது உலகின் நம்பர் 1 வீரராக ஜொலித்து வரும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தாண்டி ஹர்பஜன், அனில் கும்ப்ளேவை தேர்வு செய்துள்ளார்.

1 More update

Next Story