கொல்கத்தா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


கொல்கத்தா டெஸ்ட்:  முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட் , மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

கொல்கத்தா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் . இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது . தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்களில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர் 2வது நாள் இன்று நடைபெற்று வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களிலும் , கேஎல் ராகுல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

துருவ் ஜுரேல் 14 ரன்களும், ஜடேஜா 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 16 ரன்களுக்கு வெளியேறினார் .மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் 4 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய வரவில்லை. இறுதியில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட் , மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story