கொல்கத்தா டெஸ்ட்: ஜடேஜா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்


கொல்கத்தா டெஸ்ட்: ஜடேஜா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
x

தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

கொல்கத்தா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, பும்ராவில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது. அந்த் அணி தனது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியும் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

30 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. அந்த அணி பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக ஜடேஜா 2-வது இன்னிங்சில் அற்புதமாக பந்துவீசினார். 17-வது ஓவரை வீச வந்த ஜடேஜா, ஒரே ஓவரில் முல்டர் மற்றும் டொனி ஜி சோர்ஜி ஆகிய இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக மார்க்ரமின் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.

2-வது நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

1 More update

Next Story