கடைசி டி20: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
கொழும்பு,
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் முனைப்பு காட்டும்.அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இலங்கை விளையாடும்.
இந்த போட்டியும் தம்புலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதால், போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் 1-0 என பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றும்.






