எல்.பி.டபிள்யூ அப்பீல்.. பவுமாவின் உயரம் குறித்து பும்ரா - பண்ட் இடையே நடந்த உரையாடல்.. வைரல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்டில் இந்த சம்பவம் நடந்தது.
எல்.பி.டபிள்யூ அப்பீல்.. பவுமாவின் உயரம் குறித்து பும்ரா - பண்ட் இடையே நடந்த உரையாடல்.. வைரல்
Published on

கொல்கத்தா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த இன்னிங்சில் 13-வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரமின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா களமிறங்கினார். அந்த ஓவரின் எஞ்சிய பந்துகளை சந்தித்த அவர் ரன் எதுவும் அடிக்கவில்லை.

ஆனால் கடைசி பந்து அவரது காலில் பட்டது. இதனால் பும்ரா எல்.பி.டபிள்யூ. என நினைத்து நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை. இதனையடுத்து பும்ரா டிஆர்எஸ் எடுக்க விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் சக வீரர்களுடன் கலந்தாலோசித்தார். பந்து ஸ்டம்புக்கு மேல செல்லும் என்று கருதிய பண்ட் டிஆர்எஸ் வேணாம் என்று கூறினார். அதன்படி ரிவியூ எடுக்கவில்லை. பின்னர் பார்க்கப்பட்ட ரீப்ளேயிலும் பந்து ஸ்டம்ப்புக்கு மேலே செல்வது தெரிந்தது. பண்ட்டின் சாமர்த்தியத்தால் இந்தியாவின் ஒரு ரிவியூ வாய்ப்பு தப்பியது.

இந்த தருணத்தில் பவுமாவின் உயரம் குறித்து பும்ரா - பண்ட் இடையே சிறிய உரையாடல் நடத்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:

பண்ட்: பந்து ஸ்டம்புக்கு மேலே செல்லலாம்

பும்ரா: அவர் (பவுமா) குள்ளமானவர். இவ்வாறு அவர்களுக்கு இடையிலான உரையாடல் அமைந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com