image courtesy:ICC
image courtesy:ICC

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு அறிவிப்பு

இவர் நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் தனது கிரிக்கெட் கெரியர் இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நியூட்டன் அதில் 56 ரன்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம் 15 டி20 போட்டிகளில் விளையாடி 22 ரன்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக கடைசியா 2021-ம் ஆண்டு விளையாடிய அவருக்கு அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அவர் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com