நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த டி20 பிளேயிங் லெவன்.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்


நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த டி20 பிளேயிங் லெவன்.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்
x

நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்த அணியில் 5 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டினை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல்டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 2 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் உள்பட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் அந்த அணியில் மகேந்திரசிங் தோனி, ரோகித் சர்மா, டுவைன் பிராவோ, சூர்யகுமார் யாதவ் போன்ற திறமையான வீரர்களை தேர்வு செய்யாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.

நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த டி20 பிளேயிங் லெவன்:

கிறிஸ் கெயில், விராட் கோலி, ஜோஸ் பட்லர், ஏபி டி வில்லியர்ஸ், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ஆந்த்ரே ரசல், சுனில் நரைன், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா.

1 More update

Next Story