ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா


ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
x

Image Courtesy: @ProteasMenCSA

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார்.

கெய்ன்ஸ்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம் - ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரிக்கெல்டன் 33 ரன்களில் அவுட் ஆனார்.

மறுபுறம் அரைசதம் அடித்து அசத்திய மார்க்ரம் 82 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே 57 ரன், பிரெவிஸ் 6 ரன், ஸ்டப்ஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பவுமா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 65 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

1 More update

Next Story