ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ‘இம்பேக்ட் வீரர்’ விருதை வென்றது யார்..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ‘இம்பேக்ட் வீரர்’ விருதை வென்றது யார்..?
Published on

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், சிட்னியில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. முடிவில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னதாக ஒவ்வொரு தொடரின் முடிவிலும் அந்த தொடரில் சிறப்பாக செயல்படும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் இம்பேக்ட் வீரர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த தொடருக்கான இம்பேக்ட் வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த தொடரில் அதிக ரன் குவித்த ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com