இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் 172 ரன்கள் குவித்தார்.
துபாய்,
19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இளையோர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மாத்ரே தலைமையிலான இந்திய அணியும், யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக ஹம்சா, சமீர் களமிறங்கினர். ஹம்சா 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் 35 ரன்களும், அகமது 56 ரன்களும் சேர்ந்த்தனர்.
அதேவேளை, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சமீர் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 172 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் தீபேஷ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாட உள்ளது.






