சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர்


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர்
x

Image Courtesy: @ICC

இமாத் வாசிம் கடைசியாக கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் (வயது 35). இவர் கடந்த 2015ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

55 டி20 போட்டிகளில் ஆடி 986 ரன்னும், 44 விக்கெட்டுகளும், 75 டி20 போட்டிகளில் ஆடி 554 ரன்னும், 73 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இமாத் வாசிம் கடைசியாக கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார்.

சமீப காலமாக பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்க முடியாத அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது ஓய்வு முடிவால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். இமாத் வாசிம் உள்நாட்டு கிரிக்கெட், மற்றும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story