ஆல் டைம் ஐ.பி.எல். லெவன் அணியை தேர்வு செய்த பிரப்சிம்ரன் சிங்.. ஒரே ஒரு சிஎஸ்கே வீரருக்கு மட்டுமே இடம்

அவர் தேர்வு செய்த அணியில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை,
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரப்சிம்ரன் சிங், ஐ.பி.எல். வரலாற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அந்த அணியில் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, பிராவோ போன்ற ஜாம்பவான்களை அவர் தேர்வு செய்யவில்லை. அதுபோக கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஸ்ரேயாஸ் ஐயரையும் அவர் தேர்வு செய்யவில்லை.
அதுமட்டுமின்றி 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திரசிங் தோனியை மட்டுமே அவர் தேர்வு செய்துள்ளார். பிரப்சிம்ரன் சிங் தேர்வு செய்த அணியில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரப்சிம்ரன் சிங் தேர்வு செய்த ஆல் டைம் ஐ.பி.எல். பிளேயிங் லெவன்: கிறிஸ் கெயில், வீரேந்திர சேவாக், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், மகேந்திரசிங் தோனி, ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல்






