ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு


ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
x

Image Courtesy: @BCCI

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஜித்தேஷ் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஏசிசி ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடக்கிறது. இந்த தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி, குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏ, வங்காளதேசம் ஏ, இலங்கை ஏ, ஹாங் காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன், யுஏஇ அணிகள் உள்ளன.

இந்திய அணி வரும் 14ம் தேதி யுஏஇ அணியையும், 16ம் தேதி பாகிஸ்தானையும், 18ம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஜித்தேஷ் சர்மா கேப்டனாகவும், நமன் திர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஏ அணி விவரம்: பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் திர் (துணை கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்ஷே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர், கேப்டன்), ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாகூர், குர்ஜப்நீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் ஷரக், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் சர்மா.

ரிசர்வ் வீரர்கள்: குர்நூர் சிங் ப்ரார், குமார் குஷாரா, தனுஷ் கோடியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.


1 More update

Next Story