ரோகித் சர்மா , கில்லுக்கு உடற்தகுதி சோதனை


ரோகித் சர்மா , கில்லுக்கு உடற்தகுதி சோதனை
x
தினத்தந்தி 31 Aug 2025 1:15 AM IST (Updated: 31 Aug 2025 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய போட்டிக்கு தயாராகும் பொருட்டு உடற் தகுதி சோதனையில் பங்கேற்கிறார்.

பெங்களூரு,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி வருகிற 4-ந் தேதி துபாய் செல்கிறது. இதற்கிடையே, இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வைரஸ் காய்ச்சல் காரணமாக துலீப் கோப்பை போட்டியில் பங்கேற்காமல் சண்டிகாரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதனால் அவர் ஆசிய போட்டிக்கு தயாராகும் பொருட்டு பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடைபெறும் உடற் தகுதி சோதனையில் பங்கேற்கிறார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் தங்கள் உடற்தகுதியை சோதிக்க உள்ளனர். அதன் பிறகு அங்கு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதேபோல் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கு தங்களது உடற்தகுதியை சோதனைக்கு உட்படுத்த இருக்கின்றனர்.

1 More update

Next Story