மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்


மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 17 Nov 2025 10:55 AM IST (Updated: 17 Nov 2025 10:56 AM IST)
t-max-icont-min-icon

கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் டெஸ்ட் போட்டியை தவறவிடுவது இது 2-வது முறையாகும்.

கொல்கத்தா,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 35-வது ஓவரில் பேட் செய்ய களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், சைமன் ஹார்மர் பந்து வீச்சில் தான் சந்தித்த 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

அந்த ஷாட்டை அடித்து விட்டு நிமிர்ந்த அவர் கழுத்தை பிடித்தபடி வலியால் அவதிப்பட்டார். அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து பரிசோதித்தார். கழுத்து பகுதியில் வலி அதிகமாக இருந்ததால் சுப்மன் கில் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் பேட்டிங் செய்ய களம் திரும்பவில்லை.

இதையடுத்து சுப்மன் கில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சுப்மன் கில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அடுத்த 5 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என சுப்மன் கில்லுக்கு டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். நேற்றைய நடந்த போட்டியிலும் சுப்மன் கில் விளையாடவில்லை. மேலும் மருத்துவ அறிக்கை வந்த பிறகு இந்த டெஸ்டில் அவர் ஆடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் டெஸ்ட் போட்டியை தவறவிடுவது இது 2-வது முறையாகும்.

1 More update

Next Story