இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக சுப்மன் கில் உருவெடுப்பார் - கிர்ஸ்டன்

கேப்டன்ஷிப் என்பது நீங்கள் நிறைய விஷயங்களை ஒன்றிணைக்க வேண்டி இருக்கும் என கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் அளித்த ஒரு பேட்டியில், 'இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பணியை சுப்மன் கில் இப்போது தான் தொடங்கி உள்ளார். ஆனால் அவரிடம் நிறைய திறமை இருப்பதாக நினைக்கிறேன். அவர் ஆட்டத்தை நன்கு புரிந்து செயல்படக்கூடியவர்.
நல்ல பேட்ஸ்மேன். ஆனால் கேப்டன்ஷிப் என்பது நீங்கள் நிறைய விஷயங்களை ஒன்றிணைக்க வேண்டி இருக்கும். குறிப்பாக அணியில் உள்ள வீரர்களை சரியாக நிர்வகிக்க வேண்டியது முக்கியம். இந்த பணியை டோனி தனது கேப்டன்ஷிப்பில் பிரமாதமாக செய்தார். வீரர்களை சிறப்பாக கையாண்டதில் டோனியை விட சிறந்த கேப்டனை பார்த்தது கிடையாது. அதே போல் சுப்மன் கில்லும் அசத்தினால், இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக உருவெடுப்பார்' என்றார்.
Related Tags :
Next Story






