டி20 கிரிக்கெட்: 2-வது இந்திய வீரராக ஹர்திக் பாண்ட்யா மாபெரும் சாதனை


டி20 கிரிக்கெட்: 2-வது இந்திய வீரராக ஹர்திக் பாண்ட்யா மாபெரும் சாதனை
x

image courtesy:BCCI

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா இந்த சாதனையை படைத்தார்.

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த போட்டியில் முதல் பந்திலேயே பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 2-வது இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். இதற்கு முன்னர் அர்ஷ்தீப்சிங், கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

1 More update

Next Story