டி20 கிரிக்கெட்: இன்னும் 11 ரன்கள்தான்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்க்க உள்ள அபிஷேக் சர்மா


டி20 கிரிக்கெட்: இன்னும் 11 ரன்கள்தான்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்க்க உள்ள அபிஷேக் சர்மா
x

நடப்பு ஆசிய கோப்பையில் அபிஷேக் சர்மா இதுவரை 309 ரன்கள் குவித்துள்ளார்.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

நடப்பு தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா இந்த தொடரில் இதுவரை 309 ரன்கள் குவித்துள்ளார். இந்த சூழலில் எதிர்வரும் இந்த இறுதிப்போட்டியில் இன்னும் 11 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் வாழ்நாள் சாதனை ஒன்றை தகர்க்கலாம்.

அதன் விவரம் பின்வருமாறு:

அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 11 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கலாம்.

விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் 319 ரன்கள் அடித்ததே ஒரு தொடரில் இந்திய வீரர் அடித்த அதிக ரன்னாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க இன்னும் அபிஷேக் சர்மாவுக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்த இறுதிப்போட்டியில் அதனை முறியடிக்க வாய்ப்புள்ளது.

1 More update

Next Story