இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: @ICC / @BLACKCAPS
Image Courtesy: @ICC / @BLACKCAPS
Published on

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடக்கின்றன. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டி20 அணி விவரம்: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மென், டெவான் கான்வே, ஜேக்கப் டப்பி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, பெவான் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்பர்ட் (விக்கெட் கீப்பர்). 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com