இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கான்பெர்ரா,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி மஹ்லி பியர்ட்மேன், ஜோஷ் பிலிப் (தொடர் முழுவதும்), கிளென் மேஸ்வெல் (3-5 டி20 போட்டிகள்), பென் துவார்ஷியஸ் (4-5 டி20 போட்டிகள்) ஆகியோர் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com