இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி அறிவிப்பு


இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க  ‘ஏ’ அணி அறிவிப்பு
x

Image Courtesy: @ProteasMenCSA

தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற) போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.

டெஸ்ட் போட்டிகள் பெங்களூருவிலும், ஒருநாள் போட்டிகள் ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு மார்க்வெஸ் அக்கர்மேன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரரான டெம்பா பவுமா இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க ‘ஏ’ டெஸ்ட் அணி விவரம்: மார்க்வெஸ் அக்கர்மேன் (கேப்டன்), டெம்பா பவுமா (2வது போட்டிக்கு மட்டும்), ஒகுஹ்லே செலே, ஜுபைர் ஹம்சா, ஜோர்டான் ஹெர்மன், ரூபின் ஹெர்மன், ரிவால்டோ மூன்சாமி, ட்ஷெபோ மோரேகி, மிஹ்லாலி மபோங்வானா, லெசெகோ செனோக்வானே, ப்ரீனெலன் சுப்ரயன், கைல் சிம்மண்ட்ஸ், செபோ நட்வாண்ட்வா, ஜேசன் ஸ்மித், தியான் வான் வுரன், கோடி யூசுப்.

தென் ஆப்பிரிக்க ‘ஏ’ ஒருநாள் அணி விவரம்: மார்க்வெஸ் அக்கர்மேன் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜோர்ன் போர்டுயின், ஜோர்டான் ஹெர்மன், ரூபின் ஹெர்மன், க்வேனா மபாகா, ரிவால்டோ மூன்சாமி, ட்ஷெபோ மோரேகி, மிஹ்லாலி ம்பொங்வானா, நகாபா பீட்டர், டெலானோ போட்ஜீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், சினெதெம்பா கெஷில், கோடி யூசுப்தில், கோடி யூசுமி

1 More update

Next Story