தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
x

image courtesy: twitter/@ICC

தினத்தந்தி 20 Jun 2025 10:15 AM IST (Updated: 20 Jun 2025 10:15 AM IST)
t-max-icont-min-icon

ஜிம்பாப்வே அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹராரே,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இரு போட்டிகளும் புலவாயோவில் நடக்கிறது.

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் தென் ஆப்பிரிக்கா அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் அனுபவ வீரரான சிக்கந்தர் ராசா இடம் பெறவில்லை. மற்றொரு அனுபவ வீரரான சீன் வில்லியம்ஸ் இடம் பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம்: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், டனாகா சிவாங்கா, ட்ரெவர் க்வாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா, பிரின்ஸ் மஸ்வாரே, குண்டாய் மாட்டிகிமு, ப்ளெஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, தபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.



1 More update

Next Story