தி ஹண்ட்ரட் கிரிக்கெட்: லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லண்டன்,

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் என்பது இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100-பந்து போட்டியாகும். இதில் 8 அணிகள் பங்கேற்கும். இந்த தொடர் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் 6-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இந்திய முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இதே பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com