ரிஷப் பண்டுக்கு இந்த தொகை ரொம்ப அதிகம் - ஆகாஷ் சோப்ரா


ரிஷப் பண்டுக்கு இந்த தொகை ரொம்ப அதிகம் - ஆகாஷ் சோப்ரா
x

image courtesy:PTI

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

புதுடெல்லி,

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே சமயம் பல நட்சத்திர வீரர்களை கொண்ட ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான். ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு (ரூ.27 கோடி) வாங்கப்பட்ட அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே அந்த அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்தாலும் வெறும் 24 ரன்கள் சராசரியுடன் 269 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அவர்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படி மோசமான பேட்டிங் பார்மை அவர் வெளிப்படுத்தியது அந்த அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு கொடுத்த தொகை அதிகம் எனவும், அவரை அடுத்த ஆண்டுக்கு முன்னர் அணியில் இருந்து வெளியேற்றி பின்னர் மினி ஏலத்தில் குறைந்த விலைக்கு எடுக்கலாம் எனவும் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரிஷப் பண்டுக்கு 27 கோடி கொடுத்தது மிகப்பெரிய தொகை. எனவே என்னை பொருத்தவரை அவர் அடுத்த ஆண்டு லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவரை மீண்டும் மினி ஏலத்தில் 14 முதல் 15 கோடிக்கு எடுக்கலாம்.

மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். ரிஷப் பண்ட் திறமையான வீரர்தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படக்கூடியவர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story