டிஎன்பிஎல்: திருப்பூர் அபார பந்துவீச்சு...திண்டுக்கல் அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

திண்டுக்கல் அணி 16.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திண்டுக்கல் அணி அடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் திண்டுக்கல் அணி 16.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் எடுத்தார் . திருப்பூர் அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 94 ரன்கள் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடுகிறது.






