முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு


முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x

image courtesy:PTI

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடன் மோதுகிறது.

லாகூர்,

பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி, பகர் ஜமான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகார் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், ஷாகீன் அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

1 More update

Next Story