முத்தரப்பு தொடர்: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்


முத்தரப்பு தொடர்: பாகிஸ்தான் - நியூசிலாந்து  அணிகள் இன்று மோதல்
x

Image : @TheRealPCB

தினத்தந்தி 8 Feb 2025 10:07 AM IST (Updated: 8 Feb 2025 10:07 AM IST)
t-max-icont-min-icon

முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

லாகூர்,

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story