முத்தரப்பு டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்

image courtesy:ICC
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
சார்ஜா,
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 53 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன குர்பாஸ் (38 ரன்கள்), ரஷித் கான் (39 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த அந்த அணி 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதுகின்றன.






