யு19 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது

உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது
ஜார்ஜியா,
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
Related Tags :
Next Story






