மும்பைக்கு எதிரான வெற்றி: பஞ்சாப் கேப்டன் கூறியது என்ன ?


மும்பைக்கு எதிரான வெற்றி: பஞ்சாப் கேப்டன் கூறியது என்ன ?
x

அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார்.

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப்சிங், மார்கோ ஜான்சன், விஜய்குமார் வைசாக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.அடுத்து 185 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ் 19 புள்ளிகளுடன் முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் வெற்றி தொடர்பாக பேசிய பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,

"நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளையுமே வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எங்களின் இலக்காக இருந்தது. அதற்கு சரியான நேரத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்தனர். நான் முழு சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்படுத்திக் கொடுத்தார். அனைத்து வீரர்களின் நம்பிக்கையை பெறுவதே எனது முதல் பணியாக இருந்தது. போட்டிகளில் வெல்வதன் மூலமே அதை சாதிக்க முடியும் என எனக்குத் தெரியும். என தெரிவித்தார் .

1 More update

Next Story