லண்டனில் உடற்தகுதி சோதனை.. சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி


லண்டனில் உடற்தகுதி சோதனை.. சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி
x

image courtesy:PTI

சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோருக்கு பெங்களூருவில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது.

மும்பை,

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் தகுதியை நிரூபித்தனர். இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் உடற்தகுதி சோதனையில் பங்கேற்றனர்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு மட்டும் இங்கிலாந்தில் தனியாக உடற்தகுதி சோதனை நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வரும் கோலிக்கு பி.சி.சி.ஐ. அனுமதியுடன் அங்கு தனியாக இந்த உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விராட் கோலிக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுக்கப்படுவது ஏன்? என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 More update

Next Story