அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்: 5வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி


அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்: 5வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி
x

5வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.

வதோதரா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இது இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு 309வது போட்டியாகும். இதனால் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.

அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:

சச்சின் - 463 , தோனி- 347 , டிராவிட் - 340 , அசாருதீன் - 334, கோலி - 309.

1 More update

Next Story