சதமடித்து அசத்திய விராட்.. ஆட்டமிழந்து சென்றதும் ஓய்வறையில் கம்பீர் செய்த செயல்.. வைரல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
சதமடித்து அசத்திய விராட்.. ஆட்டமிழந்து சென்றதும் ஓய்வறையில் கம்பீர் செய்த செயல்.. வைரல்
Published on

ராஞ்சி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்டமிழந்து சென்றதும் ஓய்வறையில் இருந்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரை கட்டியணைத்து பாராட்டினார். இது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com