2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தியாவில் எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்

2026 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது .
துபாய்,
2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இம்முறை, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. உலகம் முழுவதும், இதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா பகுதி, ஆப்ரிக்கா பகுதி, ஆசியா பகுதி, ஐரோப்பா பகுதி போன்ற பல பகுதிகளிலும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில் 2026 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது . அதன்படி 2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் இருக்கைகள் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






