முதல் 2 ஆட்டங்களில் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன்? மோர்கல் விளக்கம்

அர்ஷ்தீப்சிங் வாய்ப்பு பெற்றதுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வசப்படுத்தினார்.
முதல் 2 ஆட்டங்களில் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன்? மோர்கல் விளக்கம்
Published on

சிட்னி ,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் முதல் 2 ஆட்டங்களில் வெளியே உட்கார வைக்கப்பட்டார். ஹோபர்ட்டில் நடந்த 3-வது டி20 போட்டியில் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப்சிங் வாய்ப்பு பெற்றதுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வசப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில்,

அர்ஷ்தீப்சிங் அனுபவம் வாய்ந்த பவுலர். நாங்கள் பந்து வீச்சு கலவையில் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்பது அவருக்கு தெரியும். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர், பவர்-பிளேயில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அணியில் அவர் எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை அறிவோம். ஆனால் 11 பேர் அணியில் சில மாற்றங்களை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அதனை அவரும் நன்கு புரிந்து கொண்டுள்ளார். ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு பவுலரை வெளியில் வைப்பது எளிதானது அல்ல என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com