ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து..? - கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையுடன் இன்று மோதல்

Image Courtesy: AFP
இலங்கை - நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
பல்லேகலே,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இலங்கை வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கை முயற்சிக்கும், அதேசமயம் ஆறுதல் வெற்றிக்காக நியூசிலாந்து கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






