மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி


மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி
x

Image Courtesy: @ICC

ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்துள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

துபாய்,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மெதுவாக பந்துவீசிய புகாரின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்துள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.


1 More update

Next Story