மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Image Courtesy: @BCCIWomen
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது
சண்டிகர்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கானட் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் கண்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் மந்தனா 58 ரன்னிலும், பிரதிகா ராவல் 64 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட ஹார்லீன் தியோல் 54 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன், ரோட்ரிக்ஸ் 18 ரன், ரிச்சா ஹோஷ் 25 ரன், ராதா யாதவ் 19 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 281 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.






