மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @BCCIWomen

தினத்தந்தி 22 Dec 2024 7:25 AM IST (Updated: 23 Dec 2024 8:39 AM IST)
t-max-icont-min-icon

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

வதோதரா,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி வதோதராவில் இன்று தொடங்குகிறது. டி20 தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்கும்.

அதேவேளையில் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் இந்திய அணி போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story