மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 5 Dec 2024 6:00 AM IST (Updated: 5 Dec 2024 6:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

பிரிஸ்பேன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது.

இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த தொடரில் ஆடவில்லை.

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு தாலியா மெக்ராத் தலைமை தாங்குகிறார். இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.50 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story