மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி


மகளிர்  பிரீமியர் லீக்: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி
x

பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சஞ்சனா 45 ரன்கள், நிகோலா கேரி 40 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூரு அணியில் அபாரமாக பந்துவீசிய நடைன் டி கிளெர்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி விளையாடியது.

பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 25 ரன்னிலும், ஹேமலதா 7 ரன்னிலும், ராதா யாதவ் ஒரு ரன்னிலும் , ரிச்சா கோஷ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், 6-வது வரிசையில் களம் கண்ட நடினே டி கிளார்க் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது. நாட் சிவெர் அந்த ஓவரை வீசினார். முதல் 2 பந்துகளில் ரன் வரவில்லை. 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும், 5-வது பந்தில் சிக்சரும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசிய நடினே டி கிளார்க் அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நடினே டி கிளார்க் 63 ரன்கள் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரே ஆட்டநாயகி விருது பெற்றார்.

1 More update

Next Story