மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் டெல்லி அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. ஷபாலி வர்மா 40 ரன்களில் வெளியேறினார். மெக் லேனிங் அதிரடியாக அரைசதம் அடித்தார் . அவர் 92 ரன்கள் எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியில் மேக்னா சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .
Related Tags :
Next Story






