மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து


மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து
x

Image Courtesy: @englandcricket

தினத்தந்தி 1 Dec 2024 3:00 AM IST (Updated: 1 Dec 2024 3:00 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேனியல் வியாட்-ஹாட்ஜ் 53 ரன்கள் எடுத்தார்.

சென்சூரியன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஷங்காசே 31 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சார்லோட் டீன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 11.3 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேனியல் வியாட்-ஹாட்ஜ் 53 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது.

1 More update

Next Story